Sunday 14 March 2010

பொசிடிவ் அப்ரோச்

Sharing a post from Yovoice



பொசிடிவ் அப்ரோச்: "எதையும் பொசிடிவாக செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு உதாரண கதை. எனக்கு வந்த மின் மடல். தமிழ் படுத்தியிருக்கிறேன்.

முதலில்

தந்தை : நான் தெரிவு செய்யும் பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும்.
மகன் : அதெல்லாம் முடியாது எனது மனைவியை நானே தெரிவு செய்வேன்.
தந்தை : சரி, ஆனால் நான் உனக்கு பார்த்திருக்கும் பெண் பில் கேட்சின் மகளடா
மகன் : அப்படியானால் சரி அப்பா

அடுத்து

தந்தை : உங்களது மகளுக்கு சிறந்த கணவன் எனது மகனே.
பில் கேட்ஸ் : ஆனால் எனது மகள் இன்னும் திருமண வயதை அடையவில்லை. மிகவும் சின்ன பெண்
தந்தை : ஆனால் என் மகன் உலக வங்கியின் உப தலைவர் பதவியிலிருக்கிறான்.
பில்கேட்ஸ் : அப்படியானால் சரி அவர்களை கட்டி வைப்போம்.

இறுதியில்

தந்தை : எனது மகனை உங்களது உலக வங்கியில் உப தலைவராக மும் மொழிகிறேன்.
உலக வங்கி தலைவர் : ஆனால் ஏற்கனவே எங்களுக்கு தேவையான அளவுக்கு உப தலைவர்கள் இருக்கிறார்களே..
தந்தை : ஆனால் நான் சொல்லுபவன், பில் கேட்ஸின் மருமகன்.
உலக வங்கி தலைவர் : அப்படியானால் சரி அவரை உப தலைவராக ஆக்குகிறேன்.

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் என்னிடம் எதுவுமில்லை என எண்ணாமல் முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம்.
"

1 comment: